உள்ளடக்கத்துக்குச் செல்

ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைக்ஸ்ஃபியூரர் எஸ்எஸ் வாகனக் கொடி

ரைக்ஸ்ஃபியூரர் எஸ் எஸ் (Reichsführer-SS) சிறப்பு பதவியாக ஜெர்மனியில் 1925 லிருந்து 1945 வரையுள்ள இடைப்பட்டக் காலத்தில் சுத்ஸ்டாஃபல் (எஸ் எஸ்-SS) படைப்பிரிவினரின் அதிகபட்ச அதிகாரம் கொண்டப் பதவியாக பயன்படுத்தப்பட்டது. 1926 இல் பெர்ச்டோல்ட் என்பவரால் இப்பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் 1929 முதல் ஹைன்ரிச் இம்லர் இப்பதவியை வகித்தார். எஸ் எஸ் அமைப்பின் தலைமைத் தளபதி நிலையைக் குறிக்கும் இச்சொல் சாதாரணமாக 1934 வரை அழைக்கப்பட்டு வந்த்து. ஹைன்ரிச் இம்லர் ஸ்ட்ரோமப்டேலுங் ( எஸ் ஏ-SA) அமைப்பினருக்கும் அதன் தலைவர் எர்னஸ்ட் ரோம் என்பவருக்கும் எதிராக நிகழ்த்திய நீள் கத்திகளுடைய இரவு (Night of the Long Knives) என்ற நிகழ்வுக்குப் பின்னர் இப்பதவி ஜெர்மன் இராணுவ உயர் தளபதியின் பதவி (ஜெனரல் பீல்டு மார்ஷல்) அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்பட்டது.[1] ஒரே காலத்தில் எவரும் ரைக்ஸ்ஃபியூரர் மற்றும் எஸ் எஸ் தலைமை என்ற இரு பதவிகளையும் வைத்திருந்ததில்லை இதை நிருபித்தவர் இம்லர் மட்டுமே.

பதவி வகித்தவர்கள்

[தொகு]

1925 முதல் 1945 வரையள்ள 20 வருட காலங்களில் இப்பதவியை 5 பேர் வகித்தனர் அதில் இருவர் மட்டுமே எஸ் எஸ் அமைப்பிலிருந்து வந்தவர்கள் அதில் ஒருவர் ஹைன்ரிச் இம்லர் (1929-1945). கடைசியாக பதவி வகித்தவர் கார்ல் ஹன்க (1945) இவர் இரஷ்யப் படையினரால் போரில் கொல்லப்பட்டார்.

  • ஜூலியஸ் ஷ்ரெக் (1925–1926)
  • ஜோசப் பெர்க்டோல்ட் (1926–1927)
  • எர்ஹார்ட் ஹைடன் (1927–1929)
  • ஹைன்ரிச் ஹிம்லர் (1929–1945)
  • கார்ல் ஹன்க (1945)[2]

குறிப்புகள்

[தொகு]
  1. Kershaw 2008, ப. 316.
  2. McNab 2009, ப. 16, 17.

சான்றுகள்

[தொகு]
  • Flaherty, T. H. (1988). The Third Reich: The SS. Time-Life Books, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8094-6950-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Kershaw, Ian (2008). Hitler: A Biography. New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-06757-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • McNab, Chris (2009). The SS: 1923–1945. Amber Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906626-49-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Windrow, Martin (1982). The Waffen-SS, Osprey Publishing Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85045-425-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்ஸ்_பியூரர்_எஸ்_எஸ்&oldid=4056029" இலிருந்து மீள்விக்கப்பட்டது